இலங்கையில் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், தாம் போட்டியிடப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு நெருக்கமானவர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த தகவலை சீன செய்தி நிறுவனமான ´சின்ஹூவா´ வெளியிட்டுள்ளது.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த- தனது பெயரை வெளியிட விரும்பாத முக்கிய பிரமுகர் ஒருவரை மேற்கோள்காட்டி ´சின்ஹூவா´ இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
“ராஜபக்ஷக்களுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே வாராந்த கலந்துதுரையாடல்களை ஆரம்பித்துள்ளார்.
ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலம் குறித்து இந்தக் கூட்டங்களில் கலந்துரையாடப்படுகிறது” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ நிழல் அமைச்சரவை ஒன்றை அமைத்து வாராந்தம் கூட்டங்களை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியிருப்பதாக ´சின்ஹூவா´ சுட்டிக்காட்டியுள்ளது.(ந)
