கட்டாரில் விபத்தில் ஒருவர் உயிரிழக்க காரணமான இலங்கை சாரதிக்கு சிறை!

வனக் குறைவாக காரை ஓட்டிச் சென்று ஒருவர் உயிரிழக்கவும் சிலர் காயமடையவும் காரணமான இலங்கையர் ஒருவருக்கு கட்டார் - டோஹா குற்றவியல் நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனையை விதித்துள்ளது. 

இவ்விபத்தில் வளைகுடா இணை ஒப்பந்த குடியுரிமையாளர் ஒருவர் உயிரிழந்ததுடன் சிலர் காயமடைந்தனர். 

சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை நபருக்கு ஆறு மாத சிறைத் தண்டனையை விதித்துள்ள நீதிமன்றம், மூன்று மாதங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்துள்ளது. 

அத்துடன் காப்புறுதி நிறுவனத்துடன் இணைந்து கொல்லப்பட்ட நபருக்கு இழப்பீடாக 2 லட்சம் கட்டார் ரியால்களை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 

விபத்து சல்வா என்ற வீதியில் நடந்துள்ளது. தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர் ஓட்டிச் சென்ற காரின் சில்லு ஒன்று சேதமடைந்துள்ளது. இதனால், வாகனத்தை ஒட்டிச் சென்றவர் அதனை கட்டுப்படுத்த முடியாமல், வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் மீது மோதியுள்ளார். 

மோதுண்ட கார் பல முறை புரண்டு விழுந்ததால், அதில் இருந்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -