மீண்டும் அஸ்வர் மஹிந்த கூட்டணியினால் முஸ்லிம்களை ஏமாற்ற முடியாது - பைரூஸ் ஹாஜி

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ்ஸ நேற்று வியாழக்கிழமை  (07.04.2015) முஸ்லிம் பிரதி நிதிநிதிகளை நாரேகேன்பிட்டி அபயராம விஹாரையில் சந்தித்தார். ஜனாதிபதித் தேர்தலின் பின் பகிரங்கர அமர்வொன்றில் முஸ்லிம் பிரதிநிதிகளை சந்தித்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். 

பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,  முன்னாள் ஆளுனர் அலவி மெளளானா, முன்னாள்  எம்.பி.ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டர். 

200க்கும் அதிகமான முஸ்லிம் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என பரவளாக விளம்பரப்படுத்தப்படிருந்தும் 50க்கும் குறைவானவர்களே  கலந்து கொண்டமையனது மீண்டும் மஹிந்தவினால் முஸ்லிம்களை  ஏமாற்றமுடியாது என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது என மேல் மாகாண சபை உறுப்பினரும், மத்திய கொழும்ம்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பளருமான பைரூஸ் ஹாஜி தெரிவித்தார்.

வடமேல் மாகாண சபையின் உறுப்பினர் அப்துல் சத்தாரின் தலையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது மஹிந்த ராஜபக்ஸ்ஸவின் ஆட்சிக்காலத்தில் பேருவலையில் துரதிஸ்டவசமாக இரண்டு மூன்று வீடுகள் உடைக்கப்பட்டமையானது முஸ்லிம்கள் மத்தியில் பூதாகரமான செய்திகளாக பிரசுரிக்கப்பட்டமையே கடந்த ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்கு முஸ்லிம்களின் வாக்குக்குகள் கிடைக்காமைக்கான காரணம் என நிகழ்வின் ஏற்பாட்டாளர் உரையாற்றியமையானது அவர் கலிமாச் சொன்ன முஸ்லிமா என்ற சந்தேகத்தை எழுப்பச் செய்துள்ளது.

மேலும் இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த பைரூஸ் ஹாஜி;

நாட்டில் ஹலாலாக இருந்த மஹிந்தவை ஹராமாக மாற்றுவோம் என அப்துல் சர்ந்தார் கூறியமையானது இந்த நாட்டு முஸ்லிம்களை அவமதிக்கின்ற செயலாக பார்க்கும் அதே  இடத்தில், நாட்டில் உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம் அரசியல் வாதிகளும் முஸ்லிம்களின் உரிமைகளை இல்லாதொழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு கடந்த அரசாங்கத்தில் செய்ற்பட்ட மஹிந்தவுக்கு தற்போதும் ஒருமித்த குரலுடன் எதிர்ப்பினை காட்டிவரும் இந்த நிலையில் அஸ்வர் ஹாஜி மட்டும் முற்றிலும் சுயலாபத்துக்காகவும், இந்த நாட்டு முஸ்லிம்களின் உணர்வுகளை கடுகலவேணும் மதிக்காது செயற்படுவதும் அவர் ஒரு முஸ்லிம் சகோதராரா என்ற சந்தேகமானது எனக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்தமாக இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் மத்திலும் பரவளாக பேசபடும் பொருளாக மாறிவிட்டது.

நேற்று இடம்பெற்ற இந்நிகழ்வானது சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தப் பட்டிருந்தனை பார்த்து தானும் ஒரு முஸ்லிம் சகோதரனாக கலந்து கொண்டு அங்கு என்ன உரை நிகழ்த்தப்படுகின்றது என்பதனை ஆவலுடன் அறியும் பொருட்டு எனது பிரதி நிதியாக கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் அப்துர் ரஹ்மானை அனுப்பி வைத்திருந்த வேலையில் அப்துர் ரஹ்மான் மஹிந்த ராஜபக்ஸ்ஸவிடம் கேள்வியொன்றினை தொடுத்த பொழுது அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் என்ற படியினால் முற்றிலும் ஜனநாயகம் மீறப்பட்ட நிலையில் நிகழ்வு இடம்பெற்ற இடத்திலிருந்து வற்புறுத்தலின் பேரில் வெளியேற்றப்பட்டுள்ளார். 

இவ்வாறு தனது செல்வாக்கினை முஸ்லிம்கள் மத்தியில் அதிகரித்துக் கொள்வதற்காக முஸ்லிம் பிரதிதிகளை அழைத்திருந்த மஹிந்த ராஜபக்ஸ்ஸ என்னுடைய பிரதிநிதி கேள்வி தொடுத்தற்காக வெளியேற்றுவாராயின் அவர் முஸ்லிம்களின் ஆதரவை மீண்டும் பெற்றுக்கொள்ள நினைப்பதானது முஸ்லிம்களை பழிவாங்குவதற்காகவே. 

இவ்வாறான நாடகங்ளை மாமா வேலை பார்க்கின்ற அஸ்வர் ஹாஜி போன்றோரை வைத்துக் கொண்டு அரங்கேற்றுகின்றார்.

ஆகவே நான் எமது நாட்டு மக்களிடம் பணிவாய்  கேட்டுக்கொள்வதாவது., இவ்வறான அஸ்வர் ஹாஜிபோன்றோரின் ஏமாற்று நாடகங்களுக்கு சோறம்போய் விடாமல் எமது நாட்டில் கடந்த காலங்களில் முஸ்களுக்கு இழைக்கப்பட்ட அனீதிகளையும், மீறப்பட்ட எமது உரிமைகளையும் நினைவில் வைத்து எமது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியையும், அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையும் முற்றியும் நம்பியவர்களாக எதிர் வருக்கின்றபொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியையும் பிரதமர் ரணில் விகரமசிங்கவின் கரத்தினையும் பலப்டுத்துமாறு இந்த நாட்டு முஸ்லிம் மக்களையும் சிறுபான்மை மக்களையும் வேண்டிக் கொள்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -