ஏ.எம்.றிகாஸ்-
மட்டக்களப்பு- ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவிலுள்ள சிங்காரத்தோப்பு அடர்ந்த காட்டுப்பகுதிலிருந்து ஆணின் சடலமொன்று இன்று 10.05.2015 காலை மீட்கப்பட்டதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு-வந்தாறுமூலைப் பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய கணேஷபிள்ளை கமலநாதன் என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையின் சடலமே இதுவென அவரது குடும்ப உறவினர்களினால் அடையாளங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.
சடலம் அருகே அவரது மேற்சட்டையும் குடையும் காணப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை வீட்டிலிருந்து சென்ற இவர் வீட்டிற்குத் திரும்பிவரவில்லையென்றும் என்ன நடந்தது என்பது பற்றி தமக்கு எதுவும் தெரியாதெனவும் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளதாக ஏறாவூப் பொலிஸார் மேலும் கூறினர்.
இச்சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)