தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் ஒருங்கிணைந்து, தீவிரவாதத்தை புதுப்பிக்க கூடும் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அச்சம் வௌியிட்டுள்ளார்.
தீவிரவாதிகள் இங்கு இல்லை என்பதில் மகிழ்ச்சியடைகிறோம் எனக் கூறிய அவர், எனினும் மீண்டும் நாம் தீவிரவாதத்தைக் காண்போமோ என தான் ஐயம் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
நாம் அணைவரும் நல்லிணக்கத்துடனும் அமைதியாகவும் வாழ வேண்டும் எனவும் அவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
