'மௌத் ஒன்றே இவ்வுலகில் நிச்சயமானது'......... 'அவன் எத்தகையவனென்றால்,உங்களில் எவர் செயலால் மிக்க அழகானவர் என்று உங்களை அவன் சோதிப்பதற்காக மரணத்தையும் ஜீவியத்தையும் அவன் படைத்திருக்கின்றான்.அவனே யாவற்றையும் மிகைத்தவன்,மிக்க மன்னிக்கின்றவன்' (அல்முல்க் 67: 2)
'நிச்சயமாக நீங்கள் எதைவிட்டும் வெருண்டோடுகின்றீர்களோ அத்தகைய மரணம்- நிச்சயமாக அது -உங்களைச் சந்திக்கும்';........(அல்முனாபிகூன்- 63: 8)
'எல்லா ஜீவன்களும் மரணத்தை சுகித்தே தீரவேண்டும்';(ஆலஇம்ரான் 3: 185) 'இன்னும் அல்லாஹ் எந்த ஆத்மாவையும்- அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்தவேமாட்டான்';.......(அல்முனாபிகூன்- 63: 11)
இவ்வுலகில் அல்லாஹ் எம்மைப்படைத்ததன் பின்பு அடுத்து நிச்சயமாக இடம்பெறக்கூடிய ஒரேயொரு நித்தியகைங்கரியம் மரணமாகும். எமது பிறப்பு,குடும்ப வாழ்வு, சமூக வாழ்வு,மரணம் என்ற சுற்றோட்டத்திலே நாம் எங்கு நிற்கின்றோம். எம்மைத் துரத்திக்கொண்டிருக்கும் 'மௌத்' எமது வயதையோ வாய்ப்பு வசதியையோ, நேரகாலத்ததையோ, விருப்பு வெறுப்பையோ பொருட்படுத்தாது.
அந்தளவிற்கு அல்லாஹ்வின் பிடி கடுமையானது. ஆகவே ஒரு முஸ்லிம் பிறந்தது முதல் அடுத்த எந்தநிமிடத்திலும் 'மௌத்'தை எதிர்நோக்கி அதற்கு தயார்நிலையிலேயே தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என இஸ்லாம் அறிவுறுத்துகின்றது. ஆனால் எம்மில் எத்தனைபேர் இதற்கு தயாராக இருக்கின்றோம்?.....என்பதுதான் பெரிய கேள்வியாக எம்முன்னே எழந்து நிற்கின்றது.
உலகின் தீராத ஆசைகளோடு உழன்று இறைவனின் அழைப்பு வந்தவுடன் தனது மரணச்சடங்கின் செலவு ஏற்பாடுகளுமில்லாமல் தனது குடும்பத்தின் தலையிலேயே அந்தப்பாரத்தையும் ஏற்றிவிட்டு மரணிப்பவர்கள் நாம்.....
இதை சமாளிக்க முடியாத குடும்பங்கள் அடகுவைத்தல், வட்டி போன்ற ஹறாமான வழிகளில் சென்று தமது மரியாதையைப் பாதுகாக்க விழைகின்றனர். இதை ஒருகணநேரம் சிந்திப்போம்.
ஓரு முஸ்லிம் மௌத்தானால் அந்த மையித்தை கூடிய அவசரமாக இஸ்லாமிய நெறிமுறைகளுக்கேற்ப அடக்கம் செய்யவேண்டியது முழு சமுதாயத்தினதும் தலையாய கடமை. ஆனால் எமது பாராமுகத்தினால், அசிரத்தையினால் இந்த நடைமுறையில் ஏற்படும் பிழைகளுக்கு உலமாக்கள், கற்றறிந்தவர்கள், வசதிபடைத்தவர்கள நிச்சயம் அல்லாஹ்விற்கு பதிலளித்தே ஆகவேண்டும்.
இந்த சிந்தனையின் வெளிப்பாடாகத்தான் அட்டாளைச்சேனை பெரிய ஜூம்ஆப் பள்ளிவாசலின் அனுசரணையோடு இந்த சமுதாய 'ஜனாஸா நலன்புரித் திட்டம்' அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே நோக்காக கொண்டு 'பிரஜைகள் ஆலோசனைக் குழு' வினால் முன்னெடுக்கப்படுகின்றது.
'இன்சா அல்லாஹ்' எதிர்வரும் வெள்ளிக்கிழமை 08-05-2015 அஸர் தொழுகையினைத் தொடர்ந்து எமது சந்தைச்சதுக்கத்தில் 24 மணிநேரமுமியங்கும் 'ஜனாஸா நலன்புரித் திட்டத்திற்கான' அலுவலகம் இறை நாமத்தோடு சிறப்பு பயானுடன் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
அத்தினத்திலிருந்து கீழ்குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திலொன்றை அழைத்து மையித்து செய்தி விபரங்களை தெரிவிப்பதன் மூலம் ஒருமையித்தை அடக்குவதற்குரிய சகலபொருட்களையும் இந்த இலவச புனித ஜனாசா சேவையினர் உங்களது வீட்டுவாசலுக்கு ஒருசில நிமிடங்களில் துரிதமாக கொண்டுவந்து சேர்க்கவிருக்கின்றனர்.
அத்தினத்திலிருந்து கீழ்குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திலொன்றை அழைத்து மையித்து செய்தி விபரங்களை தெரிவிப்பதன் மூலம் ஒருமையித்தை அடக்குவதற்குரிய சகலபொருட்களையும் இந்த இலவச புனித ஜனாசா சேவையினர் உங்களது வீட்டுவாசலுக்கு ஒருசில நிமிடங்களில் துரிதமாக கொண்டுவந்து சேர்க்கவிருக்கின்றனர்.
பழீல்- 0774 237 236, றியாஸ்- 07700 34600,
மனாப்- 075 710 9022, மக்கீன்-075 4562 630,
ஜாபீர்-077 2010 929, ஜப்பார்-077 6685 670
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமேநாடி அட்டாளைச்சேனையில் ஆரம்பிக்கப்படும் இப்புனித சமுதாயசேவைக்கு எமது ஒத்துழைப்பு, ஆதரவினை இறைபெயரால் வழங்குவோம்.
ச
