கிரான் பிரதேசத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பேரணி!

ஏ.எம்.றிகாஸ்-
லக செயற்பாட்டு வாரத்தையொட்டி மட்டக்களப்பு - கிரான் பிரதேசத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பேரணியொன்று நடாத்தப்பட்டது. 

கடந்தகால போர்ச்சூழலினால் கிழக்கு மாகாணத்தில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு - கிரான் பிரதேசத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போஷாக்கின்மை ஆகியவற்றை முற்றாக இல்லாமல் செய்வதே இந்த செயற்பாட்டின் இலக்கு என தெரிவிக்கப்படுகிறது. 

வேள்ட் விஷன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் கிரான் பிரதேச திட்ட பணிப்பாளர். இந்து றோகாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்லரன், பிரதேச சுகாதார வைத்தியதிகாரி ஆர் ரவிச்சந்திரன், பிரதேச செயலர் கே.தனபாலசுந்தரம் சுகாதாரத் திணைக்கள உததியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களும் இப்பேரணியில் பங்கேற்றனர். 

கிரான் சுற்றுவட்டச் சந்தியிலிருந்து ஆரம்பமான இப்பேரணி பிரதான வீதி வழியாக சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து ரெஜி காலாசார மண்டபத்தை அடைந்தது. அங்கு விஷேட செயலமர்வு நடைபெற்றது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு பதாதைகளை ஏந்திச்சென்றனர்.

மே மாதம் 4 - 11 ஆந்திகதிவரை உலக செயற்பாட்டு வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -