அபூஹூறைரா அரபிக் கல்லூரியின் புதிய கட்டிடத் திறப்பு விழா!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
பூஹூறைரா அரபிக் கல்லூரி மாணவர்கள்  (17) வத்தளை எந்தர முல்லையில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரக் கட்டிடத்தில் தமது கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

கடந்த பல வருடங்கலாக தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வந்த அபூஹூறைரா அரபிக் கல்லூரி தனவந்தர்களின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட மேற்படிப் புதிய கட்டிடத் திறப்பு விழா அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் மௌலவி எம்.எஸ்.எம்.அறூஸ் (மஹ்பளி)தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரபல வர்த்தகர் எப்.இம்தியாஸ் உட்பட மத்ரஸாவிற்கு பலவழிகளிலும் உதவி; நல்கிய தனவந்தர்கள், மார்க்க அறிஞர்கள், மௌலவிமார்கள், புத்தி ஜீவிகள், கல்விமான்கள், மத்ரஸாக்களில் கல்வி பயிலும் மாணவச் செல்வங்கள், பொதுமக்கள் என பல நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மௌலவி அப்துல் ஹமீட் பஹ்ஜி, மௌலவி அபுல் ஹஸன், மௌலவி ஹஸன் சரிப் ஆகியோர் விஷேட பயான்களை நிகழ்த்தியதுடன் வரவேற்புரையையும் தலைமையுரையையும் மத்ரஸாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மௌலவி எம்.எஸ்.எம்.அறூஸ் (மஹ்பளி) நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் மேற்படி மத்ரஸாவில் கற்று ஹிபுழ் பாட நெறியை முடித்த ஒரு தொகுதி மாணவர்கள் தலைப்பாகை சூட்டப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -