எஸ்.ஆப்தீன்-
உரிமை மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச இளைஞர் வலையமைப்பானது 'எனக்கு விளையாடுவதற்கான உரிமையுண்டு' என்ற செயற்றிட்டத்தின் கீழ் 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி ஒன்றினை அக்கரைப்பற்று தேசிய பாடசாலை மைதானத்தில் சிறுவர் கழகங்களை மைய்யமாகக் கொண்டு மிகவும் விமர்சையாக நடாத்தியது.
இதில் 10 தொடக்கம் 15 வயது வரையான 30 அனாதைச் சிறுவர்கள் பங்கேற்று பயனடைந்தமையானது விசேட அம்சமாகும்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
மேலும். இஸ்கில் றைவ் நிறுவனத்தின் தவிசாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளருமான எம்.ஏ.எம்.சமீம் அவர்கள் விசேட அதிதியாகக் கலந்து கொண்டார். அத்தோடு உரிமை மற்றும் அபிவிருத்திக்கான சர்வதேச இளைஞர் வலையமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி எம்.ஏ.எம்.சஜீர் அவர்கள் இந்நிகழ்வை வழிப்படுத்தினார்.(ந)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)