பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாடு திரும்பியதும் அவரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த குற்றச்சாட்டில் ஞானசார தேரர் உள்ளிட்ட 27 பேருக்கு 8ஆம் திகதி நீதிமன்றம் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நீதிமன்றில் ஆஜரானவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். எனினும் ஞானசார தேரர் நீதிமன்றில் ஆஜராகவில்லை. அதனால் அவரை கைது செய்யுமாறு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.(ந)
