சம்சுல் ஹுதா-
பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு கடந்த மாதம் முதல் நியமிக்கப்பட்டுள்ள சத்திர சிகிச்சை வைத்தியர் தங்கும் விடுதிக்கு தேவையான அத்தியவசியப் பொருட்களை பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு வழங்கி வைத்தது.
இதன் போது சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது, இந்நிகழ்வில் வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.இஸ்ஸதீன் அபிவிருத்திக் குழுவினரிடமிருந்து பொருட்களைப் பெற்றுக் கொண்டதுடன், அபிவிருத்திக் குழுத் தலைவர் ஏ.எம்.நசுரூதீன், செயலாளர் எம்.ஐ.முஸ்தக்கீர், பொருளார் எம்.எஸ்.அஸ்ரப், நிருவாக உறுப்பினர்களான என்.டீ.ராசுதீன் ஆசிரியர், ஐ.எல்.ஹில்முடீன் ஆகியோர் பங்குபற்றினர்.
மேலும், கடந்த காலங்களில் இவ் அபிவிருத்திக் குழு வைத்தியசாலையின் பல அபிவிருத்திகளுக்கு உரமிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.(ந)
.jpg)