அபூமனீஹா-
செஞ்சிலுவைச் சங்க தினத்தை அனுஷ்டிக்கு முகமாக அம்பாறை மாவட்ட செஞ்சிலுவைச் சங்ஙத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஓவியம் வரைதல் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) மாலை திருக்கோயிலில் இடம்பெற்றது.
இந்த போட்டி நிகழ்வில் திருக்கோயில் வலயக் கல்விப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 50க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கு பற்றினர்.
செஞ்சிலுவைச் சங்கத்தின் கல்வி மேம்பாட்டு குழு மற்றும் கிளை அபிவிருத்திக் குழவின் பொறுப்பாளர் என்.சசிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்களான ரீ.தவராசா, எஸ்.தயாபரன், மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.(ந)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)