பொலிஸார் பயணித்த வேன் ஒன்று கண்டி மஹியங்கனை பிரதான வீதியின் சேனாபிடிய பகுதியில் வைத்து டிப்பர் ரக வாகனத்துடன் மோதி இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதோடு மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
கலஹா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், உடதும்பர பகுதியில் உள்ள மரண வீடு ஒன்றுக்கு செல்லும் போதே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
விபத்தில் காயமடைந்து மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.றி