பொலன்னறுவை ஜயந்திபுர பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றுடன் தொடர்புடைய இராணுவ வீரர்கள் நால்வர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 21ம் திகதி ஜயந்திபுர பகுதியில் இராணுவ டிரக் - கார் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் காரில் பயணித்த இருவர் பலியாகினர்.
இது குறித்து பொலிஸ் விசாரணை நிறைவுற்ற நிலையில் இராணுவ டிரக் சாரதி உள்ளிட்ட நான்கு வீரர்களை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா பணி நீக்கம் செய்துள்ளார்.
குறித்த இராணுவ வீரர்கள் இராணுவ நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
இதேவேளை, சேவை அவசியம் கருதி பொலிஸ் அதிகாரிகள் அறுவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஹபராதுவ பொலிஸ் பொறுப்பதிகாரி, வெலிமட பொலிஸ் பொறுப்பதிகாரி, கொழும்பு மத்திய வலய பிரதான பொலிஸ் பரிசோதகர், வரக்காபொல பொலிஸ் பொறுப்பதிகாரி, எல்பிட்டிய பிரதான பொலிஸ் பரிசோதகர், கொழும்பு மத்திய வலய பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
