பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையில் இதுவரை 74 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகித்து வரும் லசந்த அழகியவண்ண மற்றும் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே ஆகியோரும் இதில் கையெழுத்திட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவும் இதில் கையெழுத்திட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி பங்கு பத்திர விற்பனையில் இடம்பெற்ற முறைகேட்டை அடிப்படையாக கொண்டே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்களின் கையெழுத்து பெறப்பட்ட பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான யோசனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட உள்ளது.
ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிக்குமாறும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் கூறுகின்றன./ச/
