எதிர்வரும் பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக அம்பாரை மாவட்டத்தில் மூன்று வேட்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசீம், மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர வேட்பாளர்களாக ஐக்கிய தேசியக் கட்சியில் நிறுத்தப்படவுள்ளனர்.
இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவுப் ஹக்கீம் கட்சி முக்கியஸ்தர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சம்மாந்துறை ஐ.எல்.எம்.மாஹிர் மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாகவும் நம்பகரமாகத் தெரியவருகின்றது.
