ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
தம்பலகாமம் சிராஜ் நகர் அரபிக் கல்லூரியினை போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் பார்வையிட்டார்.
அதேவேளை, பிரதி அமைச்சரின் வேண்டுகோளினை ஏற்று கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரும் அங்கு கலந்து கொண்டார்.
பிரதி அமைச்சரின் சிராஜ்நகர் இணைப்பாளர் என்.எம்.சபியுள்ளாவின் வேண்டுகோளினை ஏற்று வருகை தந்த பிரதி அமைச்சர் மற்றும் மாகாண அமைச்சரும் அரபிக் கல்லூரியின் குறைபாடுகளை கேட்டறிந்தனர்.
கல்லூரி நிர்வாகம் பல்வேறு தேவைகளை முன்வைத்தனர். அவைகளை துரித கதியில் நிறைவேற்றித்தர முயற்சி செய்வதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச சபை உதவி தவிசாளர் கே.எம்.நிஹார் மற்றும் அரபிக் கல்லூரி நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)