த.நவோஜ்,ந.குகதர்சன்-
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு வித்தியாலய மைதானத்தில் செவ்வாய்கிழமை மாலை நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் கு.சண்முகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜாசிங்கம், கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கல்குடா வலயக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி, ஏறாவூர்ப்பற்று 02 கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.சிவகுரு மற்றும் ஏனைய கல்வி அதிகாரிகள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவர்களின் அணி நடை பவனியுடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு மைதான நிகழ்ச்சிகள், ஆசிரியர்கள் நிகழ்ச்சிகள், பெற்றோர் நிகழ்ச்சிகள, உத்தியோகத்தர்களுக்கான நிகழ்ச்சி உட்பட்ட பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.
இதன்போது வெற்றி பெற்ற மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் இல்லங்கள் ஆகியோருக்கு அதிதிகளினால் பரிசில்கள் மற்றும் கேடயம் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)