தாதியர் பரீட்சையில் சிறப்பு சித்தியடைந்த சம்மாந்துறை மாணவிகள்!

சம்மாந்துறை அன்சார்-
யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிக் கல்லுாரியில் 2011 ஏ தொகுதி இறுதிப் பரீட்சையில் சம்மாந்துறையைச் சேர்ந்த மாணவிகள் சிறப்புச் சித்தியடைந்திருக்கின்றார்கள்.

இலங்கையின் முண்ணனி தாதியர் பயிற்சிக் கல்லுாரிகளில் ஒன்றான யாழ்ப்பாண தாதியர் பயிற்சிக் கல்லுாரியில் மூன்று வருட கால தாதிய பயிற்ச்சியினை வெற்றிகரமாக முடித்து இறுதிப் பரீட்சையிலேயே இவர்கள் சித்தியடைந்திருக்கின்றார்கள்.

இறுதிப் பரீட்சையில் சிறந்த சித்தியினை அடைந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான தரம் 3 தாதியர் நியமனங்களை பெற்று சம்மாந்துறைக்கும், வைத்திய சேவைக்கும் பெருமையை தேடித்தந்த புதிய தாதியர்களின் விபரமும் கிழக்கு மாகாணத்திற்கான நிலையும்-Rank கீழே தரப்பட்டுள்ளன.

01. கே.நபாயிரா - Rank 03

02. எம்.ரீ.பாத்திமா ரஜியா - Rank 10

03. ஏ.ஜே. விஜினா பேகம் - Rank 18

04. ஏ.ஆர். ஜெஸ்லுான் - Rank 89

05. ஆர். பாத்திமா ஹிப்னா - Rank 107

சுகாதார துறையில் தாதியர் சேவை என்பது உயிர் நாடியாகும், ஒவ்வொரு நோயாளிகளோடும் அன்பாகவும், ஆறுதலாகவும் இருந்து பணிவிடை செய்து அவர்களைப் பராமரிக்கும் ஒரு புனிதமிக்க சேவையாகும்.

இவ்வாறான புனிதமிக்க சேவையில் தங்களை ஈடுபடுத்தி இறுதிப் பரீட்சையில் சிறப்பு சித்திபெற்று புதிய தாதியர்களாக நியமனம் பெற்று சம்மாந்துறைக்கு பெருமை சேர்த்த தாதியர்களை மக்கள் நண்பன் இணையத்தளம் சார்பாகவும், சம்மாந்துறை மக்கள் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -