ஈ, எம் ஹனிபாவின் மறைவுக்கு அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் அனுதாபம்!

இக்பால் அலி-
தென்னிந்தியப் பாடகர் நாகூர் ஈ, எம் ஹனிபாவின் மறைவு இந்தியாவுக்கு மட்டுமல்ல சர்வதேச தமிழ் பேசும் நல்லுலகிற்கும் பாரிய இழுப்பாகும் என்று முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் தெரிவித்தார்.

பாடகர் நாகூடர் ஈ. எம். ஹனிபாவின் மறைவு தொடாபாக அமைச்சர் ஹலீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;

இவர் பாடல்களை முஸ்லிம்கள் மட்டுமல்ல தமிழ் பேசும் மக்களும் விரும்பிக் கேட்டு அகமகிழ்வார்கள். அவர் மறைந்தாலும் அவருடைய கனிரென்ற இனிமையான குரல் என்றும் மறையாது. எப்போழுதும் மக்கள் மனங்களில் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும். இஸ்லாமியத் திருநாமங்களையும் இஸ்லாமிய வரலாறுகளையும் வாழ்க்கை முறைகளையும் தத்துவார்த்தமான ரீதியில் பாடி அனைத்து உள்ளங்களையும் கவர்ந்த பெரும் புகழ் பெற்ற பாடகராவர். 

இவரது குடும்பத்திற்கும் மற்றும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெவித்துக் கொள்வதோடு மறுமை வாழ்வில் சொர்க்கத்துச் சுவனப் பூங்காவை அடைய எல்லாம் வல்ல அல்லாஹூதஆலா அருள் புரிய வேண்டும் எனப் பிரார்த்தின்றேன். என்று அமைச்சர் ஹலீம் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -