முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்-
தலைமன்னார் புகையிரத சேவை மைத்திரி யுகத்தில் 25 வருடங்களின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தலைமன்னாரில் இருந்து உத்தியோகபூர்வமாக இந்தியப்பிரதமர் மோடி அவர்களால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டு சிறப்பாக இயங்கிக்கொண்டு இருக்கிறது.
இதனால் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த அரச ஊழியர்களும் , பொது மக்களும் பெரும் நன்மை அடைந்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்திற்கு யாழ்தேவியும் சிறப்பாக ஓடிக் கொண்டுள்ளது. மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லவுள்ள பயணிகள் மாகோ சந்தியில் இறங்கி யாழ்தேவியில் யாழ் செல்ல வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களில் இருந்து தலை மன்னார் செல்ல வரும் பயணிகள் கொழும்பில் இருந்து வரும் தலைமன்னார் புகையிரதங்களை தவற விடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு புகையிரதம் மாகோவை அடைய சில நிமிடங்கள் இருக்கும் வேளை தலை மன்னார் புகையிரதம் சென்று விடுகின்றது.
இதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர் கொள்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு மட்டக்களப்பு புகையிரதத்தில் வரும் பயணிகள் இலகுவாக தலைமன்னார் புகையிரதத்தில் மாறிச் செல்லும் வாய்ப்பு எற்படுத்தப்பட வேண்டும்.
இவ்விடயத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களும், மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
