உடுகம மஹா பத்திரகித்த தேரரின் மறைவிற்கு அமைச்சர் ஹலீம் அனுதாபம்!

இக்பால் அலி-
ஸ்கிரிய பீடத்தின் மஹாநாயகர் அதி வணக்கத்துக்குரிய உடுகம மஹா பத்திரகித்த தேரர் சிங்கபூர் மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலையில் சிசிக்சை பெற்ற வேளையில் மரணமான செய்தி கேட்டு தாம் ஆழ்ந்த துக்கத்தையும் கவலையையும் அடைந்துள்ளதாக முஸ்லிம் சமய கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் தெரிவித்துள்ளார்.

தம்முடைய அனுதாபச் செய்தியில் அமைச்சர் ஹலீம் விடுத்த அறிக்கையின் போது இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;

இவர் தம் வாழ்க்கையில் கூடுதலாக பௌத்த சமயத்தை கட்டி எழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் பாடுபாட்டாலும் ஏனைய சமயங்களையும் மதித்து அவர்களுடன் நட்புறவையும் பேணி நடக்கின்ற நல்லிதயம் கொண்டவர். கடந்த காலங்களில் முஸ்லிம் சிங்கள மக்களுடைய உறவைக் கட்டி எழுப்புவதற்காக பல்வேறு வகைகயில் மறைமுகமாகவும் வெளிப்படையாகவுமாகவும் என்னுடன் இணைந்து செயற்பட்டுள்ளார்.

அன்னாரது இழப்பு பௌத்த சமயத்திற்கு மட்டுமல்ல கண்டி ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி மக்கள் உட்பட முழு நாட்டு மக்களுக்கும் பாரிய இழப்பாகும் என்று அமைச்சர் ஹலீம் மேலும் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -