அய்ஷத் ஸெய்னி -
க.பொ.த சாதாரண தரப்பரிட்சையில் (2014) முதல் முதலாக தோற்றிய அக்கரைப்பற்று வலயத்திற்கு உட்பட்ட பாலமுனை அல்-ஹிதாயா வித்தியாலய மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பரிட்சைக்கு தோற்றிய 19 மாணவிகளில் 16 மாணவிகள் க.பொ.த உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்
சிறந்த பெறுபேறாக,
6A 2B C செல்வி I.F. இஹ்சானா,
6A B 2C செல்வி M.I. பாத்திமா றீமா ஆகிய மாணவிகள் பெற்றுள்ளனர்.
இஸ்லாம் ,புவியியல், உடற்கல்வி, சித்திரம், வரலாறு ஆகிய பாடங்களில் 100% சித்தி பெறப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது பற்றி பாடசாலை அதிபர் K.L.M. உபைத்துல்லாஹ் JP கருத்துத் தெரிவிக்கையில்,
“பல்வேறு விதமான வளப்பற்றாக்குறை இருந்த போதும் முதல் முறையாக க.பொ.த சாதாரண தரப்பரிட்சைக்கு தோற்றிய எமது பாடசாலை மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று இப்பாடசாலைக்கும் பாலமுனை மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
பரிட்சையில் சித்தியடைந்த மாணவிகளையும் இதற்காக அர்ப்பணத்துடன் செயற்பட்ட ஆசிரியர்களையும் பாராட்டுவதோடு , ஊக்கம் தந்த முன்னால் அதிபர் எம்.சி. அப்துஸ் ஸமது அவர்களுக்கும் பாடசாலை அபிவிருத்தி சங்கம், வலயக் கல்வி பணிமனையினர் மற்றும் இதற்கு உறுதுணையாக இருந்த பெற்றார்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்” என்றார்.
.jpg)
.jpg)