பழுலுல்லாஹ் பர்ஹான்-
காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2015ம் ஆண்டுக்கான புதிய நிருவாகத் தெரிவு 03-04-2015 இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் காத்தான்குடி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.ஸமீலுல் இலாஹி தலைமையில் இடம்பெற்ற இந் நிருவாகத் தெரிவில் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி ஜெ.கலாராணி, மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தகவல் நிலையப் பொறுப்பதிகாரி மகேந்திரராசா, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி குகதாஸ் உட்பட காத்தான்குடி பிரதேசத்திலுள்ள இளைஞர் கழகங்களின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், அமைப்பாளர்கள், உப தலைவர்கள், உப செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராக ஏ.எல்.எம்.நியாஸூம், செயலாளராக பதவி வழியாக பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.ஸமீலுல் இலாஹியும், பொருளாளராக எம்.ஐ.எம்.சிஹாபும், அமைப்பாளராக எம்.எம்.எம்.பைஸூம், உப தலைவராக எம்.எம்.எம்.ஜெஸீரும், உப செயலாளராக எம்.ரீ.எம்.இர்பானும், உப அமைப்பாளராக எம்.ஆர்.எப்.அதீகாவும் தெரிவு செய்யப்பட்டனர்.
இங்கு காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் செயற்பாட்டுக் குழுவின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டதுடன் ஒழுக்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டு ஆலோசனைக்குழுவும் ஸ்தாபிக்கப்பட்டது.
குறிப்பு 2015 இவ் வருடம் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 21 இளைஞர் கழகங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)