நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 25வது வருட பூர்த்தி!

ஏ.எஸ்.எம்.தாணீஸ்-

தோப்பூர் ஸ்டார் கிண்ணத்தினை ஈஸ்ட் லங்கா விளையாட்டுக் கழகத்தினர் 05 விக்கட்டுகளால்கைப்பற்றிக் கொண்டனர்.

நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் 25வது வருட பூர்த்தியை முன்னிட்டு தோப்பூர் பிரதேசகடிணபந்து விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நடைபெற்ற கிரிக்கட் இறுதிப்போட்டியில் கோல்ட்ஸ்டார் மற்றும் ஈஸ்ட் லங்கா ஆகிய அணிகள் ஒன்றையொன்று எதிர்த்தாடின.

நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டுத் தலைவர் ஏ.ஆர்.றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கோல்ட் ஸ்டார்அணியினா மட்டுப்;படுத்தப்பட்ட 16 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 96 ஒட்டங்களைபெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஈஸ்ட் லங்கா அணியினர் 10.2 ஒவர்களில் 05 விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 97 ஐ இலகுவாக பெற்று ஸ்டார் கிண்ணத்தினை கைப்பற்றிக் கொண்டனர்.

போட்டியின் நாயகனாகவும்,தொடர் ஆட்ட நாயகனாகவும் ஐ.எம்.ஹாபீஸ் தெரிவு செய்யப்பட்டர். ஈஸ்ட் லங்கா அணி சார்பாக அதிகூடிய ஓட்டமாக எம்.பஸ்ரின் 30 ஓட்டங்களை தங்களது அணிக்காகபெற்றுக் கொடு;த்தார்.

கோல்ட்ஸ்டார் அணி சார்பாக எம்.எம்.ஹிசாம் 17 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.போட்டிக்கு விசேட அதிதியாக கலந்துகொண்ட நியூஸ்டார் விளையாட்டு கழகத்தின் போசகர்எம்.எம்.றியாஸ் சம்பியன் அணிக்கு வழங்கி வெற்றிக்கிண்ணத்தினை வழங்கி கௌரவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -