ஏ.எஸ்.எம்.ஜாவித்-
கண்ணியத்திற்குரிய கதீப், முஅத்தின்களுக்கான அமானா தக்காபுல் திட்டத்தை ஆரம்பித்து வைத்தலும் கௌரவிப்பு விழாவும் ஸ்ரீ லங்கா கதீப், முஅத்தின் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தேசியத் தலைவர் காரி மௌலவி எம்.ஐ. அப்துல் ஜப்பார் தலைமையில் நேற்று (09) மாலை கொழும்பு-10, டி.ஆர் விஜயவர்தன மாவத்தையில் உள்ள தபால் திணைக்கள தலைமையக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், ஏ.எச்.எம்.பௌசி, முஸ்லிம் விவகார மற்றும் தபால் அமைச்சின் செயலாளர் அப்துல் மஜீத், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான நூறுல் அமீன், அன்வர் அலி, கொடை வள்ளல் முஹம்மது அரூஸ், சட்டத்தரணி முஹமட் ஜிப்ரி, எம்.எச்.சுபைர், நாடளாவிய ரீதியிலிருந்து கதீப், முஅத்தின்மார்கள் மற்றும் பல பிரமுகர்களும் அமானா தகாபுல் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி ஏ.ஆர். ஜெப்ரி உட்பட நிறுவனத்தின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் மனித உரிமைகள் அமைப்பினால் சான்றிதழ்களும், அமானா தக்காபுல் நிறுவனத்தினால் அமானா தக்காபுல் காப்புறுதித் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டு ஒரு தொகுதியினருக்கு காப்புறுதிச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டதுடன் மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் கலாநிதி எம்.என்.எம்.அஸீமினால் அமைச்சர் ஹலீம் பொன்னாடை போர்த்தியும், நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்படார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)