இளம் வயதில் சதுரங்கப் போட்டிகளில் சாதனை படைத்து வரும் ஹரிகிசன்!

இக்பால் அலி-
லங்கையில் இளம் வயதில் சதுரங்கப் போட்டிகளில் சாதனை படைத்து வரும் 11 வயதுடைய கண்டி திரித்துவக் கல்லூரி மாணவன் கே. சி. ஹரிகிசன் இம்மாதம் 5 . 6 ஆம் திகதிகளில் கொழும்பு மொரட்டுவ பாடசாலையில் உலகப் பாடசாலைகளுக்கிடையே தாய்லாந்தில் நடைபெறும் சதுரங்கப் போட்டியில் பங்கு கொள்வதற்காக 6/6 என்ற போட்டியில் பங்கு கொண்டு தங்கப் பதக்கத்தையும் தாய்லாந்து செல்வதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளார். 

அதேவேளை, இவர் பெப்ரவரி மாதம் சுகததாச விளையாட்டு அரங்கில் சோட்டோகான் கராட்டி நிறுவனம் எட்டாவது தடவையாக நடத்திய கராட்டிப் போட்டியிலும் இவர் பங்கு கொண்டு அகில இலங்கை ரீதியில் தங்கப் பதக்கத்தையும் பெற்றார். 

நடப்பு வருடத்தில் இரட்டைச் சாதனைகள் படைத்த இளம் வீரர் ஹரிஷன் தம் கல்வித்துறையிலும் அதிகம் ஈடுபாடு காட்டி வருகின்றார்.

ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த இந்த இளம் வீரர் டிப்ளோமா இன் ஐட்டி பட்டத்தையும் பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தமது 2 ½ வயதில் சதுரங்க விளையாட்டில் போட்டிப் பயணத்தை ஆரம்பித்த இவர் பல்வேறு தங்கப் பதக்கங்களுக்கும் வெள்ளிப் பதக்கங்களுக்கும் உரித்துவடையவராவர். தேசிய மட்டத்தில் மட்டுமன்றி உலக ரீதியிலான போட்டிகளிலும் பங்கு கொண்டு அபாரத் திறமைகளை வெளிக் காட்டியுள்ளார். 

இவர் ரஷ்யா, போலாந்து, மலேசியா, இந்தியா, டில்லி, சென்னை, டுபாய் போன்ற நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். தொடர்ச்சியாக தம்மால் சாதனைகள் படைக்க வேண்டும் என்ற துடிப்புடன் ஈடுபட்டு வருகின்றார்.

இம்மாதம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள உலகப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டியிலும் அடுத்த மாதம் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள ஆசியாப் பாடசாலைகளுக்கடையிலான போட்டியிலும் பங்கு கொண்டு தாய் நாட்டுக்குப் பெருமை சேர்க்கவுள்ளார் ஹரிகிசன்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -