தேசிய முயற்சியாண்மை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளரானார் முஹ்லிஸ் வஹாப்தீன்!

எம்.வை.அமீர்-
க்குரணை முஹ்லிஸ் வஹாப்தீன் தேசிய முயற்சியாண்மை அபிவிருத்தி திணைக்களத்தின் (National Enterprises Development Authority) பணிப்பாளராக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீனால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர், சுவிட்சர்லாந்தில் இயங்கி வரும் SHAMAAZ GMBH கம்பனியின் பணிப்பாளருமாவார். கிராம மட்டத்தில் பள்ளிகளை மையப்படுத்தி கல்வி மேம்பாட்டுக்காக தனது பங்களிப்பை வழங்கி வருவதோடு சமூக சேவையில் ஆர்வமுள்ளவராகவும் காணப்படுகிறார். 

சமூக சேவைகளில், குறிப்பாக கல்வி அபிவிருத்திப் பணிகளில் பல வருட காலங்களாக மிகுந்த ஆர்வம் காட்டி வரும் இவர், தனது பாடசாலைக் கல்வியை அக்குறணை அஸ்ஹர் கல்லுாரியில் கற்ற பின், தனது உயர்கல்வியை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் (வெளிவாரி மாணவனாக) கற்றுக் கொண்டிருந்த வேளையில் சுவிட்ஸர்லாந்துக்கு வியாபார நோக்கமாக சென்றார். அங்கிருந்தவாறே தனது உயர்கல்வியை நிறைவு செய்த இவர் ஜெனீவாவில் இயங்கி வரும் பல சமூக சேவை நிறுவனங்களின் அங்கத்தவராக கடமையாற்றியவருமாவார். ஜெனீவாவில் வாழும் இலங்கையின் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தி பல்வேறு சமூக, கலாசார, சமய மற்றும் கல்வி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. 

அக்குரணை அஸ்ஹர் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியரும் முன்னாள் அக்குரணை பிரதேச சபை உறுப்பினருமான MM.வஹாப்தீனின் புதல்வராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -