ஐபிஎல் சீசன் 8 போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், பெண் வர்ணனையாளர்கள் நான்கு பேர் இடம்பெற்றுள்ளனர்.
இப்போட்டிகளில் வர்ணனை செய்ய நேற்று 26 பேர் கொண்ட வர்ணனையாளர்கள் குழு அறிவிக்கப்பட்டது.
அதில் நீண்ட நாளைக்குப் பிறகு ரவி சாஸ்திரி வர்ணனையாளராக மீண்டும் களமிறங்குகிறார்.
இந்தக் குழுவில் 4 பெண்களும் இடம்பெற்றுள்ளார்கள். அஞ்சும் சோப்ரா, இஷா குஹா, லிசா ஸ்தலேகர், மெலானி ஜோன்ஸ் ஆகிய நான்கு பேரும் வீராங்கனைகள் ஆவர்.
அஞ்சும் சோப்ரா முன்னாள் இந்திய அணித்தலைவர். இஷா குஹா, இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர், இவரும் கிரிக்கெட் வர்ணனை குழுவில் இடம் பெற்றுள்ளார்.
இந்திய வம்சாவழியைச் சேர்ந்த லிசா ஸ்தலேகர் மற்றும் மெலானி ஜோன்ஸ் அவுஸ்திரேலிய முன்னாள் வீராங்கனைகள் ஆவர்.
