எம்.எஸ்.சம்சுல் ஹுதா-
அம்பாறை அறுகம்பை சுற்றுலாப்பிரதேச முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் நலன்புரி அமைப்பிற்கான சீருடை மற்றும் சுற்றுலாப் போக்கு வரத்துச் சேவையில் ஈடுபடுவதற்கான அடையாள அட்டைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு அல்-அக்ஸா வித்தியாலத்தில் நடைபெற்றது.
மேற்படி சுற்றுலாப் போக்கு வரத்து முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கான அறுகம்பை ஆட்டோ உரிமையாளர்கள் நலன்புரி அமைப்பொன்று முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் முயற்சியினால் முறையாக பதிவு செய்து இயங்கி வருகின்றது.
மேலும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பையின் நிதியொதுக்கீட்டின் மூலம் இவர்களுக்கான சீருடை வழங்கப்பட்டதுடன் பிரதேச செயலகமூடாக அமைப்பு பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான அடையாள அட்டைகளும்; வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அறுகம்பை பிரதேசமானது சுற்றுலாத்துறைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாகும். அந்த வகையில் சுற்றுலாப் போக்குவரத்து சேவையில் ஈடபட்டுவரும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களை ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு அவர்களுக்கான வசதி, வாய்ப்புக்களையும், முறையான தொழில் அனுமதியினையும் வழங்குவதற்கு உதவி செய்த மாகாண சபை உறுப்பினருக்கு அமைப்பின் தலைவர் ஏ.முஸம்மில் நன்றியினை தெரிவித்துள்ளார்.
அறுகம்பை ஆட்டோ உரிமையாளர்கள் நலன்புரி அமைப்பின் தலைவர் ஏ.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.எம்.வாஸித், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் இணைப்பதிகாரி எம்.எம்.பஹ்ஜி, தேசிய காங்கிஸின் பொத்துவில் பிரதேச அமைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான ஏ.பதுர்காண் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.
%2Bcopy.jpg)

%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)