பாறுக் சிகான்-
யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீட பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளமையினால் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாக மாணவப்பிரதிநிதி சிவானந்தம் தெரிவித்துள்ளார்.
இதன் படி கடந்த சில கிழமைகளாக இடம்பெற்ற போராட்டம் தற்போது நிறைவு பெற்றுள்ளது.அத்தோடு புதிய இணைப்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அத்துறை மாணவர்களிற்கு அரையாண்டு பரீட்சைகள் தற்போது நடைபெற ஏற்பாடாகி உள்ளன.
இவ்வேளை தங்கள் துறை தொடர்பாக செய்திகளை ஊடகங்கள் தகுந்த தரப்பிடம் எடுத்து சென்றமைக்கு நன்றி கூறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
%2Bcopy.jpg)