கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சீனாவின் ஷங்காய் நகருக்குப் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானம், தொழில்நுட்பக் கோளாறினால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகளை வேறொரு விமானம் மூலம் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
பிற்பகல் 02.10க்கு புறப்பட்ட விமானம், 02 மணித்தியாலங்களின் பின்னர், 04.55அளவில் தரையிறக்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர பொது முகாமையாளர் கூறினார்.
