பேரின்பராஜா சபேஷ் -
பொலன்னறுவை மாவட்டம் மன்னம்பிட்டி மஹாவலி கங்கைக்கு அருகில் உள்ள முருகன் ஆலயத்தில் அரச அனுசரணையில் கும்பாபிஷேக உற்சவத்தை ஏற்பாடு செய்யுமாறு பொலொன்னறுவை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரீ.பி. பவாசீலி ஜயலத் பணிப்புரை விடுத்துள்ளார்.
திம்புலாகல பிரதேச செயலாளருக்கே அரசாங்க அதிபரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிங்கள தமிழ் மக்களின் ஆன்மீக ஒன்று கூடல் தலமாக விளங்கும் இந்த ஆலயத்தில் சமய நல்லிணக்கத்தையும் சமூக சகவாழ்வையும் வளர்க்கும் நோக்குடன் இன ஐக்கிய கும்பாபிஷேகப் பெருவிழாவை நடாத்த ஏற்பாடு செய்யுமாறு ஆலய யாத்திரை மடத்தின் நம்பிக்கைச் சபைப் பொறுப்பாளரும் பொருளாளரும் ஸ்ரீரமண மகரிஷி அறப்பணி மன்ற இலங்கைக் கிளைத் தலைவருமான எம். செல்லத்துரை அரசாங்க அதிபரிடம் விடுத்த வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதற்கு அமைவாகவே இந்தப் பணிப்புரை அரசாங்க அதிபரால் வழங்கப்பட்டுள்ளது.
மே மாதம் 03 ஆம் திகதி நிகழும் வெசாக் உற்சவத்துடன் இணைந்ததாக இந்த கும்பாபிஷேகமும் நடைபெற ஏற்பாடு செய்யுமாறு கேட்கப்பட்டுள்ளது.
கடந்த முப்பது வருட போருக்குப் பின்னர் தமிழ் சிங்கள மக்கள் இணைந்து இந்த கங்கைக் கோயிலில் இன ஐக்கிய கும்பாபிஷேகப் பெருவிழாவை நடாத்தவுள்ளதாகவும் எதிர்காலத்தில் திம்புலாகல பிரதேசத்தில் வாழும் தமிழ் சிங்கள மக்களின் இன ஐக்கியத்திற்கூடாக சமய நல்லிணக்கத்தையும் சமூக சகவாழ்வையும் வளர்க்க விரும்புவதாகவும் ஆலய யாத்திரை மடத்தின் நம்பிக்கைச் சபைப் பொறுப்பாளரும் பொருளாளரும் ஸ்ரீரமண மகரிஷி அறப்பணி மன்ற இலங்கைக் கிளைத் தலைவருமான எம். செல்லத்துரை தெரிவித்தார்.(ந-த்)

.jpg)
.jpg)