ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
முள்ளிப்பொத்தான கந்தளாவ மத்திய மருந்தகத்தினை போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் பார்வையிட்டார்.
அதேவேளை, பிரதி அமைச்சரின் வேண்டுகோளினை ஏற்று கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரும் அங்கு கலந்து கொண்டார்.
பிரதி அமைச்சரின் தம்பலகாமம் பிரதேச இணைப்பாளரும்,சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான எம்.எஸ். அய்யுப்கானின் வேண்டுகோளினை ஏற்று வருகை தந்த பிரதி அமைச்சர் மற்றும் மாகாண அமைச்சரும் வைத்தியசாலையின் குறைபாடுகளையும்,அப்பிரதேச சுகாதார பிரச்சினைகளையும் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.
அதேவேளை, பொதுமக்கள் பிரதான தேவையாக உள்ள சுகாதார பிரச்சினைகளை அமைச்சர்களிடம் முன்வைத்தனர். அத்தோடு மத்திய மருந்தகத்தினை பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்தித் தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர் மக்களின் நலனில் அக்கறை கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் வாக்குறுதி அளித்தார்.
இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச சபை உதவி தவிசாளர் கே.எம்.நிஹார் மற்றும் ஊர்ப்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)