ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வரட்சி காரணமாக காட்டு யானைகள் மணியரசங் குளத்திற்கு நீராட வருகை தருவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்காக வேண்டி சுமார் ஆறு யானைகள் மாலை வேளையில் இவ்வாறு நீராடும் கண்கொள்ளாக் காட்சிகளை பிரதேச வாசிகள் கண்டு களிக்கின்றனர்.
இவ்வாறு வருகை தரும் காட்டு யானைகளால் குளஅணைக்கட்டுகளும் சேதமாக்கப்டுகின்றன.
இவ்வாறு அணைக்கட்டு சேதமாக்கப்படுவதால் இப்பிரதேசத்தில் நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புக்கள் காணப்படுவதால் வன ஜீவராசி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பிரதேச விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
