பழுலுல்லாஹ் பர்ஹான்-
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவினால் விபத்துக்களை தடுக்க பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பகுதிகளில் செல்லும் பழைய பழுதடைந்த வாகனங்களை பரிசோதிக்கும் நிகழ்வு 23.04.2015 இன்று வியாழக்கிழமை காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றது.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி துஷார ஜெயலால் தலைமையில் இடம்பெற்ற இவ் வாகன பிரிசோதனை நிகழ்வில் மட்டக்களப்பு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சிரேஷ்ட பரிசோதகர் சீ.எச்.கே.விமலசந்திர உட்பட காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சிரேஷ்ட பரிசோதகர் சீ.எச்.கே.விமலசந்திரவினால் பழைய பழுதடைந்த வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டதுடன் ஒழுங்கற்ற முறையில் வாகனங்களை வைத்துக் கொண்டு செலுத்திய வாகன உரிமையாளர்களின் சாரதி அனுமதிப்பத்திரம் பொலிசாரினால் பறிமுதல் செய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சிரேஷ்ட பரிசோதகரினால் ஒரு பத்திரம் வழங்கப்பட்டதுடன் அப் பத்திரம் வழங்கப்பட்டு பத்து தினங்களுக்குள் ஒழுங்கற்ற முறையில் செலுத்தப்பட்ட வாகனங்கள் சரிசெய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சிரேஷ்ட பரிசோதகரிடம் காட்டப்படவேண்டும் அப்படி காட்டப்பட்டால் சாரதி அனுமதிப்பத்திரம் பொலிசாரினால் கொடுக்கப்படும் இல்லாவிட்டால் குறித்த வாகனங்கள் பாவனைக்கு உதவாத வாகனம் என்று நீதி மன்றத்திற்கு ஒப்படைக்கப்படும் என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி துஷார ஜெயலால் தெரிவித்தார்.
மேற்படி பழைய வாகனங்களை பரிசோதிக்கப்படும் போது அவதானிக்கப்படும் விடயங்கள் ஒழுங்கற்ற முறையில் பிறேக், தேய்ந்த டயர், மேலதிகமான அலங்காரங்கள்,லைட்,சிக்னல் லைட் ,கோன்,ஙியர் ,கிலச் போன்ற பல்வேறு வாகன ஒழுக்குகள் அவதானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.(ந-த்)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)