கோத்தபாயவை விசாரணைக்கு அழைக்கவுள்ளனர்!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச புலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளார். அவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் களஞ்சியம் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் இவ்வாறு கோத்தபாய விரைவில் புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்படவுள்ளார். 

தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்றுக்கு இராணுவத்தினரின் ஆயுதங்களை வழங்கியதாக கோத்தபாய மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக கோத்தபாயவின் வீட்டுக்கு சென்று புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியிருந்தனர். 

அவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் களஞ்சியம் தொடர்பில் ஏற்கனவே மூன்று கடற்படைத் தளபதிகளிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -