எம்.ஜே.எம்.சஜீத்,முஜாஹித்-
கல்வியில் மட்டும் நின்று விடாது இணை பாடவிதான செயற்பாடுகளிலும் தங்களது அறிவு விரித்தியை முன்னெடுத்து செல்வதற்காக வேண்டி அரசாங்கத்தினால் இவ்வாறான விளையாட்டு விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டின் மூலம் மன வளர்ச்சி அடைவதோடு, எம்மிடத்தில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, தலைமைத்துவப்பண்பும், வெற்றி தோல்வியை சமமென மதிக்கும் தன்மை தானாகவே வளரும் எனவும் நீண்ட நாட்களுக்கு பிறகு இக்கல்லூரியின் விளையாட்டு விழாவில் நான் கலந்து கொண்டமைக்கு நான் மகிழ்ச்சியடைவதோடு கல்வி அமைச்சின் சார்பாக இவ் ஏற்பாட்டுக் குழுக்கு முதலில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
தமிழ், முஸ்லிம் ஆசிரிய பயிலுனர் மாணவர்கள் கற்கும் இக்கலாசாலை பிராந்தியத்தின் கல்வி வளர்ச்சிக்கு முன் நின்று செயற்பட வேண்டும் என கல்வி அமைச்சின் உதவிச்செயலாளர் என்.எச்.எம். சித்திரானந்த தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி கல்விக்கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ் தலைமையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ் இல்ல விளையாட்டுப்போட்டி விழா பஜ்ரி, நஜிமி, கமரி என மூன்று இல்லங்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது.
இதன் போது 181 புள்ளிகளை பெற்று கமரி இல்லம் மூன்றாம் இடத்தையும், 213 புள்ளிகளை பெற்று நஜிமி இல்லம் இரண்டாம் இடத்தையும், 260 புள்ளிகளை பெற்று பஜ்ரி இல்லம் முதலாம் இடத்தில் சம்பியானாக தெரிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் ஆசிரியர் கலாசாலையின் கல்விப்பணிப்பாளர் திருமதி காரிஜா, அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாவையின் அதிபர் ஏ.சி.எம். சுபைர், கல்லூரியி பதிவாளர் எஸ்.எம். பசீர், கல்லூரியின் முன்னால் பீடாதிபதி ஏ.எல்.ஏ. றசூழ் உட்பட கல்விமான்களும் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)