ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம்.சந்திரசேன, டீ.பி.ஏக்கநாயக்க மற்றும் சலிந்த திஸாநாயக்க ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தன்னை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்ட கடிதம் தனக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அக் கட்சியின் மத்தியகுழுத் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டமையே இதற்குக் காரணம் எனத் தெரியவருகின்றது.
