வட மாகாண ஆளுநர் யாழ் முஸ்லீம் குழுவினருடன் சந்திப்பு!

பாறுக் ஷிஹான்-
விடுதலை புலிகளால் 1990ம் ஆண்டு இரண்டு மணித்தியால நேர அவகாசத்தில் யாழில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை பலவந்தமாக வெளியேற்றியமை கண்டிக்கத்தக்க செயலாகும் என வடமாகாண ஆளுனர் ஆர்.டி. பள்ளியகார தெரிவித்தார். 

வெள்ளிக்கிழமை (17) காலை ஆளுனர் வாசஸ்தலத்தில் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எச்.ஜமால் மொஹிடீன் தலைமையில் 17 பேர் அடங்கிய குழுவினர் ஆளுனரை சந்தித்த வேளை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

1990ம் ஆண்டு இரண்டு மணித்தியால நேர அவகாசத்தில் யாழில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை பலவந்தமாக வெளியேற்றியமை கண்டிக்கத்தக்க செயலாகும். உங்களின் கவலைகளையும் வேதனைகளையும் சொத்து இழப்புக்களையும் நான் நன்றாக அறிந்துள்ளேன். LLRC யில் இரண்டு வருடமாக பணியாற்றிய வகையில் உங்கள் நிலைமைகளை அறியும் வாய்ப்பு ஏற்பட்டன. 

சொத்து இழப்புக்கான நஷ்டஈடுகள் சம்மந்தமாக பரிந்துரைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன என மேலும் கூறினார்.

இச்சந்திப்பில் முன்னாள் உதவி மேயர் எம்.ஜி.பஷிர் எம்.சி முபீன் ஆகியோரின் விளக்கவுரையின் பின்னர் தற்போது மீள்குடியேறி வாழும் மக்களுக்கான வீடமைப்பு காணிப்பிரச்சினை நஷ்டஈடு ஒஸ்மானியாக் கல்லூரி அதிபர் நியமனம் மஸ்ஜித் அபூபக்கர் பள்ளிவாசல் காணி உறுதிப்பிரச்சினை சம்மந்தமாக உரிய அமைச்சுக்களுடன் தொடர்பு கொண்ட பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருவதாக இதன்போது ஆளுநர் உறுதியளித்துள்ளார்.

இச் சந்திப்பில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி அகில இலங்கை உலமா சபை தலைவர் மௌலவி ஏ.அஸீஸ் சம்மேளனத்தின் செயலாளர் ஆர்.கே. சுவர்ஹகான் பொருளாளர் எஸ் சுபுஹான் பிரதி தலைவர் கே.எம்.நிலாம் பிரதி செயலாளர் எம்.எல். லாபிர் மற்றும் பள்ளிவாசல் தலைவர்களான எம்.தாஹிர் எம். கியாஸ் உவைஸ் ஹாஜி முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சரபுல் அனாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -