19 இல் 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்!

19 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நாளை (20) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

நாளை (20) காலை 9 மணியளவில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் அது குறித்து இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் தெரிவிக்கின்றார்.

சபையின் நாளைய நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் 19 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

19 ஆவது திருத்தத்தில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின், அது குறித்து இன்று (19) நடைபெறவுள்ள ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பிரதி சபாநாயகர் மேலும் கூறினார்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஜனாதிபதியின் தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று (19) நடைபெறவுள்ளது.

பாராளுமன்றத்திற்கு நாளை (20) சமர்ப்பிக்கப்படவுள்ள 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில், கட்சி என்ற அடிப்படையில் இதுவரை தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என ஜாதிக ஹெல உருமய குறிப்பிடுகின்றது.

இன்றைய தினம் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது சட்டமூலம் தொடர்பில் தெளிவாக அறிந்து கொண்டதன் பின்னர் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதாக அந்த கட்சியின் ஊடக பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவிக்கின்றார்.

பாராளுமன்றத்திற்கு நாளை (20) சமர்ப்பிக்கப்படவுள்ள 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இதுவரை சரியான புரிந்துணர்விற்கு வரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

ஆயினும் ஜனாதிபதி தலைமையில் இன்று (19) நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், அதுகுறித்து பூரண தெளிவைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நிஷாந்த வர்ணசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறைமையில் மாற்றம் மேற்கொள்வதற்கான வழிமுறைகளும், 19 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜாதிக ஹெல உருமய இருப்பதாக அதன் ஊடக பேச்சாளர் மேலும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -