மைத்திரி தம்பிக்கு நடந்தது; மஹிந்த தம்பிக்கு நடந்து இருந்தால் எப்படி இருந்திருக்கும்?

பிரியந்த சிறிசேனவை கோடரியால் தாக்கியது போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தாபாய ராஜபக்சவை அன்று யாராவது தாக்கியிருந்தால் அந்த மாவட்டமே அழிக்கப்பட்டிருக்கலாம் என கால்நடை பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அன்று அவ்வாறான ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தால், அந்த மாவட்டமே அழிந்திருக்கும் என்பதை மக்கள் நன்கு அறிவர்.

எனினும் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரை கோடரியில் தாக்கியதால் எங்கும் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை, இது தான் நல்லாட்சி என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்து மகிந்தவின் ஆட்சிக்கும், மைத்திரியின் ஆட்சிக்கும் இடையிலான வேறுபாட்டை மக்களால் உணர்ந்து கொள்ள முடிகிறதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -