இளைஞர் யுவதிகள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்குவேன் -முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்

க்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்களை கிழக்கிலங்கைக்கு அழைத்து வந்து முதலீடு செய்து வேலை வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு தனியார் நிறுவங்களை அமைத்து அதன் மூலமும் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் திட்டம் கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரினால் மேற்கொள்ளப்படுகிறது.

நேற்று முன் தினம் முதலமைச்சரால் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து வருகை தந்திருந்த தொழிலதிபர்களான முஸ்தாக் முகம்மட், சிமொன் பின் ஸ்மித் ஆகியோர் கிழக்கு மாகாண முதலமைச்சர் காரியாலத்தில் சந்திப்பொன்றினை மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடாத்தினர்.

கிழக்கில் முதலீடு செய்து நிறுவனங்களை உருவாக்கி கல்வியை இடை நடுவில் விட்ட வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். என்று முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது போக்கு வரத்து பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தெளபீக்கும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஊடகப்பிரிவு-

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -