ஊடகப்பிரிவு-
காத்தான்குடி அல்-அதாலா பௌண்டேஷனின் ஏற்பாட்டில் பயனாளிகளுக்கு குழாய் நீர் இணைப்பினைப் பெற்றுக்கொள்வதற்கான உதவிகளை வழங்கும் நிகழ்வு நேற்று (11.04.2015) PMGG யின் மக்கள் அரங்கில் இடம்பெற்றது.
காத்தான்குடி நகரசபை உறுப்பினர் MAHM.மிஹ்ழார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இத்திட்டத்திற்கான நிதியுதவியினை வழங்கிய அல்-கிம்மா நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் HM. ஜாபீர் நளீமி, அல்-கிம்மா நிறுவனத்தைச் சேர்ந்த MU. பசீர் மௌலவி, NFGGயின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் நளீமி உட்பட அல்-அதாலா பௌண்டேஷன் நிறுவனத்தின் பிரதிநிதிகளான அஷ்ஷெய்க் ALM.சபீல் நளீமி, வித்யாகீர்த்தி MM.அமீரலி ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதற்கான நிதியுதவியினை ஓட்டமாவடி அல்-கிம்மா நிறுவனம் வழங்கியது.
இதன்போது மேற்படி குழாய் நீர் இணைப்பினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் முதற்கட்டமாக 20 பயனாளிகளுக்கு அதற்கான உதவிகள் வழங்கப்பட்டன.
இதேவேளை எதிர்காலத்தில் அல்-அதாலா பௌண்டேஷன், மேலும் பல பயனாளிகளுக்கு குழாய் நீர் இணைப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கான உதவிகளை வழங்கவுள்ளதாகவும் இந்நிகழ்வின்போது தெரிவிக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)