ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
தம்பலகாமம் சிராஜ் நகர் அரபிக் கல்லூரி வீதியினை போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் பார்வையிட்டார்.
பிரதி அமைச்சரின் சிராஜ்நகர் இணைப்பாளர் என்.எம்.சபியுள்ளாவின் வேண்டுகோளினை ஏற்று வருகை தந்த பிரதி அமைச்சர் மக்களின் போக்குவரத்து பிரச்சினைகளை நேரடியாகச் சென்று கேட்டறிந்தார்.
அதேவேளை, பொதுமக்களின் பிரதான தேவையாக இருக்கும் உள்ளக வீதிகளை புனரமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்றுக் கொண்ட பிரதி அமைச்சர் மக்களின் நலனில் அக்கறை கொண்டு வீதிகளுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து கிறவல் இடுவதற்கு நிதி ஒதுக்கித் தருவதாக வாக்குறுதி அளித்தார்.
இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச சபை உதவி தவிசாளர் கே.எம்.நிஹார் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் அய்யூப்கான்,மற்றும் ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)