வடமாகாண சபையின் புதிய உறுப்பினர் நியமனம்!

டமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் மேரி கமலா குணசீலனுக்கு பதிலாக புதிய உறுப்பினராக எம்.பி.நட்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். 

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று நடைபெற்ற போது, புதிய உறுப்பினர் சபைக்கு வருகை தந்தார். சுழற்சிமுறையில் வடமாகாண சபை உறுப்பினர் பதவியை வகிப்பதாக வடமாகாண சபை உறுப்பினர்கள் பதவியேற்ற போது, மேரிகமலா குணசீலன் உறுதிமொழி வழங்கியிருந்தார். அதனடிப்படையில் ஒரு வருடம் நிறைவடைந்ததையடுத்து அவருடைய உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். அவரது இடத்துக்கு முன்னாள் வவுனியா கோட்டக் கல்விப் பணிப்பாளர் நட்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியை சேர்ந்த இவர் கடந்த வடமாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -