இக்பால் அலி-
ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா மற்றும் பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசல் ஆகிய இணைந்து நடாத்தும் வருடாந்த இஸ்லாமிய எழுச்சி மாநாடு 03-04-2015 ஜும்ஆத் தொழுகையுடன் பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளதாக, ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான் தெரிவித்தார்.
ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவரும் மற்றும் பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவருமான அஷ்ஷெய்க் என் பீ. முஹம்மது அபூபக்கர் சித்தீக் மதனி தலைமையில் நடைபெறும்.
இந்நிகழ்வில்;
அஷ்ஷெய்க் என்.பீ. முஹம்மது அபூபக்கர் சித்தீக் மதனி- சுயபரிசோதனை என்ற தலைப்பிலும்,
அஷ்ஷெய்க் எம். எஸ். அப்துல் வதூத்-உளத்தூய்மை என்ற தலைப்பிலும்,
அஷ்ஷெய்க் எஸ். எச். எம். இஸ்மாயீல்-அஹ்லுஸ் சுன்னாவின் அடிப்படைகள் என்ற தலைப்பிலும்,
அஷ்ஷெய்க் ஸபர் அஜ்வாத் பஹ்ஜி மதனி-சுவிட்சமான வாழ்வுக்கு இஸ்லாம் காட்டும் வழிமுறைகள் என்ற தலைப்பிலும்,
அஷ்ஷெய்க் அல்ஹாபீழ் எம். எச். எம். ஜஹான் பலாஹி-மனித உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம் என்ற தலைப்பிலும் உரையாற்றவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
