மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் மாபெரும் வியாபார சந்தை -படங்கள்!

பழுலுல்லாஹ் பர்ஹான்-
ட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மற்றும் சேவ் த சில்ரன் நிறுவனங்கள் இணைந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடனும் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் சம்மேளனத்தின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் வியாபார சந்தை 09-05-2015 நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஒரு தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெண்களின் பங்களிப்பும் அவசியம் எனும் தொனிப்பொருளில் பெண்களின் வியாபார சந்தையை வலுப்படுத்தும் முகமாகவும், பண்டிகைக்காலத்தை முன்னிட்டும் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் மாபெரும் வியாபார சந்தையை மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் ஆரம்பித்து வைத்தார்.

இவ் மாபெரும் வியாபார சந்தை அங்குரார்ப்பண நிகழ்வில் சேவ் த சில்ரன் சர்வதேச நிறுவனத்தின் இலங்கை நாட்டுக்கான தலைவர் வில்லியம் லிங்ஸ் ,வை.எம்.சீ.ஏ. நிறுவனத்தின் தலைவர் வீ.டி.சேஹராஜசிங்கம் ,வாகரை பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.ஆர்.ராஹூலநாயகி, சேவ் த சில்ரன் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஜூலியன் செல்லப்பா, மட்டக்களப்பு மாவட்ட கைத்தொழில் வர்த்தக சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.கே.குகதாஸ், மட்டக்களப்பு மாவட்ட மகளிர் சம்மேளனத்தின் மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.அருளானி சந்திரசேகரம், மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மற்றும் சேவ் த சில்ரன் நிறுவனங்களின் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்ட மகளிர் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவ் வியாபார சந்தையில் உள்ளுரில் உற்பத்தி செய்யப்படும் ஆரோக்கியமான தரமான பொருட்களான பால் உற்பத்திப்பொருட்கள், கிராமிய பாரம்பரிய உணவுகள், பனை மற்றும் நாட்டரிசி, அரிசிமா, உழுந்துமா மீன்கருவாடு, தின்பண்டங்கள்,நாட்டுக்கோழி முட்டை, இயற்கை பசளை பாவித்து உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகள், பழவகைகள், சிறுவர்கள் வளந்தோருக்கான தைக்கப்பட்ட ஆடைகள், கைப்பணிப் பொருட்கள் உட்பட பல கிராமிய உற்பத்திப்பொருட்கள் குறைந்த விலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்படி மாபெரும் வியாபார சந்தை இன்று 10ம், நாளை 11ம் ஆகிய திகதிகளில் காலை 9.மணி தொடக்கம் இரவு 10.மணி வரை இடம் பெறவுள்ளது.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -