கிழக்கு மாகாண சபை வரலாற்றில் தமிழில் தேசிய கீதம்- முதலமச்சரின் அதிரடி உத்தரவு

னைத்து சமூகங்களையும் ஒருங்கிணைத்து நல்லாட்சிக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்திய கிழக்கு மாகாண சபை, தேசிய கீதத்தை தமிழ் இசைக்கும் முன்மாதிரி ஒன்றையும் இன்று வெளிப்படுத்தியது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதின் நடவடிக்கையை அடுத்து இன்று தமிழிலும் மாகாண சபையில் தேசிய கீதம் இசைத்து வரலாறு படைத்துள்ளது.

கடந்த ஆட்சியில் தேசிய கீதத்தை தமிழில் இசைப்பதில் ஏற்பட்டிருந்த தடங்களை மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி விடுவித்ததை அடுத்து முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இன ஒற்றுமைக்கு வித்திட்டுள்ளார்.

முதலமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:

இலங்கை நாட்டில் இன்று நல்லாட்சி மலர்ந்துள்ள இவ்வேளையில் குழப்பம் விளைவிக்க சிலர் முன்வந்துள்ளனர். அவர்களின் கசட்டுத்தனமான என்னங்களை பறித்து வீசிவிடவேண்டும் என்றால் நாம் சகல இன, மொழி மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும். அதன் ஒரு படியாக இன்று கிழக்கில் மொழியால் ஒற்றுமைப்பட்டிருக்கிறோம்.

கிழக்கு மாகாணத்தை ஏனைய மாகாண மக்களுக்கு ஒரு முன்னுதாரணமாக மாற்றியமைக்க என்னால் முடிந்த சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். இதற்காக அரசியல் வாதிகள், நல்ல சிந்தனையுள்ளவர்கள், மதத்தலைவர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் அனைவரும் கைகொடுக்குமாறு அன்பான அழைப்பு விடுக்கிறேன். என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனதறிக்கையில் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -