காதலன் புறக்கணித்ததால் பேரழகியாக மாறிய இளம் நங்கை!

த்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த 15 வயது சிறுமி லீ ஹீ டனாய். 

இவரை உயிருக்குயிராய் நேசித்துவந்த ஒருவர் ”நீ அழகாக இல்லை” என்று உதறியத்தள்ளியதால் ஆவேசம் அடைந்த லீ ஹீ, பத்துக்கும் மேற்பட்ட முகமாற்று சத்திர சிகிச்சைகள் மூலம் உலகிலேயே மிக அழகிய பொம்மை பேரழியாக சீன சமூக வலைத்தளமான ‘வீபோ’வில் பிரபலமாகி வருகிறார். 

சிறிய கண்களை பெரிதாக்கிக் கொள்வது, கீழ் இமைகள், மேல் இமைகளை மேம்படுத்துவது, முகத்தில் உள்ள தாடையின் எலும்புகளை செதுக்கி, குழி விழும் அழகிய கன்னங்களை உருவாக்கியது, குண்டாக இருந்த நாசியை ‘v´ வடிவில் கூர்மைப்படுத்தியது, சருமப் பளபளப்பு மற்றும் மார்பழகை எடுப்பாக மேம்படுத்துவது என பத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரிகள் மூலம் பெண்ணுக்குண்டான அத்தனை சிறப்பம்சங்களும் அடங்கிய ‘சாமுந்த்ரிகா இலட்சணம்’ பொருந்திய இளம் தேவதையாக தோன்றும் லீ ஹீயை ‘பார்பி கேர்ள்’ என சீன இளைஞர்கள் கொண்டாடுகின்றனர். 

சமீபத்தில் சீன சமூக வலைத்தளமான ‘வீபோ’வில் வெளியாகியுள்ள இவரது புதிய புகைப்படங்களுக்கு 05 இலட்சத்துக்கும் அதிகமான ‘Like´கள் குவிந்துள்ளன. 

எனினும், அதில் ஒரு ‘Like´ அவரை புறக்கணித்த காதலனிடம் இருந்து கிடைத்துள்ளதா? என்பது தெரியவில்லை.(ந-த்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -